TNPSC Thervupettagam

தேசியக் கைத்தறி தினம் – ஆகஸ்ட் 07

August 7 , 2019 1939 days 577 0
  • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று தேசியக் கைத்தறி தினத்தை அனுசரிக்கின்றது.
  • இத்தினமானது முதன்முறையாக 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • பிரிட்டீஷ் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினையை எதிர்த்து போராடுவதற்காக கொல்கத்தா டவுன் ஹாலில் 07–08–1905  அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை அனுசரிப்பதற்காக ஆகஸ்ட் 07 என்ற தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இத்தினமானது நாட்டில் உள்ள கைத்தறித் தொழிலாளர்களை கௌரவிப்பதற்காகவும் கைத்தறித் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும்  இந்தியப் பொருளாதாரத்திற்குக் கைத்தறித் தொழிற்சாலைகளின் பங்கை எடுத்துக் காட்டுவதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் தேசியக் கைத்தறி தினத்தின் முக்கிய நிகழ்வானது ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் நடத்தப் படவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்