TNPSC Thervupettagam

தேசியக் கைத்தறித் தினம் 2023 - ஆகஸ்ட் 07

August 8 , 2023 477 days 269 0
  • இந்தத் தினமானது நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இது ஜவுளித் துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் அனுசரிக்கப் படுகிறது.
  • மத்திய அரசு ஆனது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்நாளை அறிவித்தது.
  • சுதேசி இயக்கத்தை நினைவு கூரும் வகையில் ஆகஸ்ட் 07ஆம் தேதியானது தேசியக் கைத்தறி தினமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • 1905 ஆம் ஆண்டு இந்நாளில் ஆங்கிலேய அரசினால் மேற்கொள்ளப்பட்ட வங்காளப் பிரிவினையை எதிர்த்து கல்கத்தா நகர் மன்றத்தில் இந்த இயக்கம் தொடங்கப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துருவானது, "ஒரு நிலையான உடை நாகரீகத்திற்கான கைத்தறி" என்பதாகும்.
  • கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பதால் கைத்தறித் துறை பெண்கள் அதிகாரமளிப்பிற்கு என்று ஒரு முக்கியமான துறையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்