TNPSC Thervupettagam

தேசியக் கையெழுத்துப் பிரதிகள் திட்டம் 2024

November 4 , 2024 21 days 86 0
  • மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஆனது தேசியக் கையெழுத்துப் பிரதிகள் திட்டத்தினை (NMM) "புதுப்பித்து மீண்டும் தொடங்க" உள்ளது.
  • இந்தியாவில் உள்ள பண்டைய நூல்களைப் பாதுகாக்க உதவும் தன்னாட்சி அமைப்பை உருவாக்குவது குறித்தும் அது பரிசீலித்து வருகிறது.
  • தற்போது, NMM ஆனது இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
  • தேசியக் கையெழுத்துப் பிரதிகள் ஆணையம் என்று பெயரிடப்பட உள்ள இந்தப் புதிய அமைப்பு ஆனது அமைச்சகத்தின் கீழான ஒரு தன்னாட்சி அமைப்பாக இருக்கும்.
  • இன்று வரை 52 லட்சம் கையெழுத்துப் பிரதிகளின் மேல் நிலை தரவுகள் தயாரிக்கப் பட்டு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் எண்ணிம மயமாக்கப் பட்டு உள்ளன என்று NMM தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள 80% கையெழுத்துப் பிரதிகள் தனியார் /தனி நபரிடம் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்