TNPSC Thervupettagam

தேசியக் கொடி ஏற்கப்பட்ட தினம் – ஜூலை 22

July 25 , 2023 491 days 192 0
  • அரசியலமைப்பு நிர்ணயச் சபையானது 1947 ஆம் ஆண்டில் தற்போதைய வடிவத்தில் உள்ள மூவர்ணக் கொடியை ஏற்றுக் கொண்ட ஒரு நாளினை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப் படுகிறது.
  • தேசியக் கொடியானது, 1923 ஆம் ஆண்டில் முதன்முறையாக பிங்காலி வெங்கையா என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
  • வெங்கய்யா முதலாவதாக வடிவமைத்த கொடி வடிவமைப்பில் இரண்டு வண்ணங்கள் மட்டுமே இருந்த ஒரு நிலையில் அவை இந்திய நாட்டிலுள்ள இந்துக்களைக் குறிக்கும் சிவப்பு நிறத்தினையும் மற்றும் முஸ்லிம் மக்களைக் குறிக்கும் பச்சை நிறத்தினையும் கொண்டிருந்தது.
  • M.K. காந்தி அவர்கள் அமைதி மற்றும் இந்தியாவிலுள்ள பிற சமூகங்களைக் குறிக்கும் வகையில் வெள்ளை நிறத்தைச் சேர்க்கும்படி வெங்கையாவிடம் கேட்டுக் கொண்டார்.
  • மேலும் தேசத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சுழலும் சக்கரத்தை நடுவில் சேர்க்கவும் அவர் பரிந்துரைத்தார்.
  • 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று அரசியலமைப்பு நிர்ணயச் சபையானது இந்தக் கொடியின் இறுதி வடிவமைப்பிற்கு அங்கீகாரமளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்