இந்தியாவின் இயற்கை அழகை அங்கீகரிப்பதையும், இந்தியப் பொருளாதாரத்திற்கு சுற்றுலாவின் பெரும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதையும் இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய அரசானது, தேசியப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 1948 ஆம் ஆண்டில் ஒரு தனி சுற்றுலாத் துறையை உருவாக்கியது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Tourism for Inclusive Growth" என்பதாகும்.
ஐக்கிய நாடுகளின் உலகச் சுற்றுலா அமைப்பு (UNWTO) ஆனது, செப்டம்பர் 27 ஆம் தேதியன்று உலக சுற்றுலா தினத்தைக் கொண்டாடுகிறது.