தடுப்பூசியின் நன்மைகளைப் பற்றி மக்களுக்குக் கற்பித்தல் மற்றும் தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகள் அல்லது தவறான கருத்துக்களை அகற்றுவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1988 ஆம் ஆண்டில், புவியில் இருந்து போலியோ நோயை ஒழிப்பதற்கான ஒரு முதல் படியாக உலக சுகாதார அமைப்பானது ஒரு உலகளாவிய போலியோ ஒழிப்பு முன்னெடுப்பினைத் தொடங்கியது.
1995 ஆம் ஆண்டில், அதே நாளில், இந்தியாவில் போலியோ நோயை ஒழிப்பதற்கான முதல் முயற்சியாக இந்திய அரசானது பல்ஸ் போலியோ நோய்த்தடுப்புத் திட்டத்தைத் தொடங்கியது.
அன்றிலிருந்து மார்ச் 16 ஆம் தேதியானது தேசியத் தடுப்பூசி தினமாக கொண்டாடப் படுகிறது.