TNPSC Thervupettagam

தேசியத் தேர்வு முகமையிடமிருந்து பயிற்சி

June 25 , 2018 2219 days 822 0
  • தேசியத் தேர்வுகள் முகமையானது வினாத்தாள் வடிவமைப்பாளர்களுக்கு சிறந்த வினாத்தாள்களை வடிவமைக்கவும், சிறந்த மாதிரி விடைகளை வழங்கவும் பயிற்சியளிக்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் இதர கல்வி ஒழுங்குமுறை அமைப்புகள் நடத்தும் பல்வேறு சுமையான தேர்வுகளிலிருந்து அவர்களை விடுவிக்க தேசியத் தேர்வுகள் முகமையானது உருவாக்கப்பட்டது.
  • இந்த அமைப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளை (10 மற்றும் 12-வது தேர்வுகள் தவிர) நடத்தும் பொறுப்பினை 2019 முதல் படிப்படியாக பெறும்.
  • இந்த அமைப்பு நடத்தும் சிறப்புமிகு தேர்வுகள்
    • ஜே.இ.இ. (JEE) மற்றும்
    • நீட் (NEET) - எய்ம்ஸ் (AIIMS) மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் (JIPMER) ஆகியவற்றைத் தவிர

தேசியத் தேர்வு முகமை :

  • இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை நடத்த தேசியத் தேர்வு முகமை என்னும் அமைப்பை அமைக்க நவம்பரில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைப்பானது தன்னாட்சி அதிகாரமும், சுய சார்பு கொண்ட முதன்மை தேர்வு அமைப்பாகவும் செயல்படும்.
  • இந்த முகமையானது இந்திய சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் (1860) ஒரு கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • எந்தவொரு துறை அல்லது அமைச்சகங்கள் நுழைவுத் தேர்வு நடத்த இடும் ஆணைகளையும் இந்த அமைப்பு செயல்படுத்தும். நுழைவுத் தேர்வுகளை நடத்தும் வலுவான அமைப்பாக இது செயல்படும்.
  • மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்படும் சிறந்த கல்வியாளரைத் தலைவராகக் கொண்டு இது செயல்படும். இவற்றின் முதன்மை நிர்வாக அதிகாரியாக பொது இயக்குநர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்.
  • இவர்களைத் தவிர, நிர்வாகக் குழுவில் பயனாளர் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இடம் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்