TNPSC Thervupettagam

தேசியத் தொழில்நுட்ப தினம்

May 12 , 2019 1967 days 1093 0
  • மே 11 அன்று இந்தியா முழுவதும் தேசியத் தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படுகின்றது. 1998 ஆம் ஆண்டு மே 11 அன்று சக்தி நடவடிக்கை – 98 (பொக்ரான் அணுக்கரு சோதனை) நடத்தப்பட்டது.
  • இத்தினத்தில் இந்தியா 3 அணுக்கரு சோதனைகளை நடத்தியது.
  • இதைத் தொடர்ந்து அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியாவை ஒரு முழு அணு ஆயுத நாடாக அறிவித்தார்.
  • 1998 ஆம் ஆண்டு மே 11 அன்று நிகழ்த்தப்பட்ட மற்ற சாதனைகள்
    • திரிசூல் ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை
    • பெங்களூருவில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதலாவது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ஹன்சா-3 விமானத்தின் சோதனை.
  • இத்தினமானது இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் சாதனைகளை அனுசரிக்கின்றது.
  • இந்தியத் தொழில்நுட்ப வளர்ச்சி வாரியமானது இத்தினத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்பை ஏற்படுத்திய தனிநபர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி இத்தினத்தை அனுசரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்