TNPSC Thervupettagam

தேசியப் பச்சிளம் குழந்தைகள் வாரம் - நவம்பர் 15/21

November 29 , 2024 24 days 53 0
  • குழந்தைகளின் உயிர் பிழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு புதிதாகப் பச்சிளம் குழந்தையைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குழந்தைப் பருவமானது ஒரு நாளுக்கு அதிக உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தைக் கொண்டுள்ளதால், பச்சிளம் குழந்தைகளின் ஆரம்பகாலக் குழந்தைப் பருவம் ஆனது (அதன் வாழ்வின் முதல் 28 நாட்கள்) குழந்தை உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியம் ஆனதாகும்.
  • பச்சிளம் குழந்தையின் உயிரிழப்பு விகிதம் ஆனது (NMR) 2000 ஆம் ஆண்டில் 1000க்கு 44 ஆக இருந்த நிலையில் இது 2024 ஆம் ஆண்டில் 1000க்கு 18 ஆகக் குறைந்துள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டிற்குள் 1000க்கு 14 ஆகவும் குறைக்கப் படும்.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதத்தை 1000க்கு 20 ஆக குறைப்பதே இதன் நோக்கம் ஆகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Safety, Quality and Nurturing care – Birth Right of Every Newborn" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்