முதலாவது தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் பஞ்சாயத்து அமைப்பில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றமானது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் (73 வது திருத்தம்) வடிவில் ஏற்பட்டதாகும்.
இந்தச் சட்டமானது 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று நடைமுறைக்கு வந்தது.
ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில், மத்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகமானது ஒரு தேசியக் கருத்தரங்கை நடத்துகின்றது.
இந்த அமைச்சகமானது சிறப்பாக செயல்படும் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு “பஞ்சாயத்து சசாக்திக்கரன் புரஸ்கர்/ராஷ்டிரிய கவுரவ் கிராம் சபை புரஸ்கர்” என்ற விருதினை வழங்குகின்றது.
மேலும், இந்த அமைச்சகமானது சிறப்பாகச் செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு பின்வரும் விருதுகளையும் வழங்குகின்றது.
மின்னணு – பஞ்சாயத்து புரஸ்கர்
நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ் கிராம சபை புரஸ்கர்