TNPSC Thervupettagam

தேசியப் படைப்பாளிகளுக்கான விருதுகள்

April 3 , 2024 265 days 386 0
  • எண்ணிம கலைஞர்கள் மற்றும் எண்ணிம ஊடகத்தில் மிகுந்த கருத்து தாக்கத்தினை செலுத்துபவர்களின் அதிகரித்து வரும் தாக்கத்தை நன்கு அங்கீகரிப்பதற்காகவும், இந்தியாவின் எண்ணிமப் பொருளாதாரத்திற்கு ஆதரிப்பதற்காகவும் மத்திய அரசு தேசியப் படைப்பாளிகளுக்கான விருதினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் எதிர்காலத்தின் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும் மற்றும் எண்ணிம ஊடகத்தில் நேர்மறையான சமூக மாற்றத்தை ஊக்குவிக்கும் பல நபர்களின் கருத்துக்கள் மற்றும் திறன்களை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த விருதானது வழங்கப் படுகிறது.
  • 20 பிரிவுகளில் பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை தேசியப் படைப்பாளிகள் விருது அங்கீகரிக்கிறது.
  • இது கதை சொல்லல், சமூக மாற்றத்தை வலியுறுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத் தன்மை, கல்வி, விளையாட்டு மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய களங்களில் சிறந்து விளங்குதலையும் அதன் தாக்கத்தையும் அங்கீகரிக்கிறது.
  • இது தவிர, சர்வதேசப் படைப்பாளிகள் விருது ஒன்றும் வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்