நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேசியப் பணமாக்கல் தொடர் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
அடுத்த 4 ஆண்டுகளில் விற்கப்பட இருக்கும் அரசின் உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துகளைப் பட்டியலிடுவதற்கான முயற்சிகளை இது மேற்கொள்கிறது.
இது அரசின் உற்பத்தித் துறை (பிரவுன்ஃபீல்டு) உள்கட்டமைப்பு சார் சொத்துகளின் 4 ஆண்டு தொடர் திட்டத்தினை உள்ளடக்கியதாகும்.
2021-22 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் உள்கட்டமைப்பிற்கான புத்தாக்க மற்றும் மாற்று நிதி வழங்கலை உருவாக்குவதற்காக வேண்டி அரசின் சொத்துக்களைப் பணமாக்குதல் குறித்து பெருமளவில் முக்கியத்துவம் அளிக்கப் பட்டு, பல முக்கிய அறிவிப்புகளும் அதில் உள்ளடக்கப்பட்டது.