TNPSC Thervupettagam

தேசியப் பணியிடப் பாதுகாப்பு தினம் - மார்ச் 04

March 11 , 2023 629 days 203 0
  • இந்தத் தினத்தின் முக்கிய குறிக்கோள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்து உரைத்தல் மற்றும் பணியிட விபத்துகளைத் தவிர்ப்பதற்காக மக்கள் அவற்றைப் பற்றி அறிந்து, அவற்றைப் பின்பற்றுவதனை உறுதி செய்தல் என்பதாகும்.
  • இந்தத் தினமானது தேசியப் பாதுகாப்புச் சபை நிறுவப் பட்டதை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
  • தேசியப் பாதுகாப்புச் சபை என்பது ஒரு இலாப நோக்கற்ற சுயநிதி அமைப்பாகும்.
  • இது 1966 ஆம் ஆண்டு மார்ச் 04 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நமது குறிக்கோள் - தீங்கின்மை" என்பது ஆகும்.
  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 04 முதல் 10 ஆம் தேதி வரை தேசியப் பணியிடப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்