TNPSC Thervupettagam

தேசியப் பருவநிலை சேவைக் கட்டமைப்பு

October 17 , 2023 278 days 158 0
  • பருவநிலை சார்ந்த சேவைகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கான தனது முதல் தேசிய அளவிலானக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு இந்திய அரசு முடிவு செய்து உள்ளது.
  • இது இந்திய வானிலை ஆய்வுத் துறையினால் (IMD) முன்வைக்கப்பட்டது.
  • தேசியப் பருவநிலை சேவைக் கட்டமைப்பானது (NFCS) பருவநிலை சார்ந்தத் தகவல் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு தடையற்றச் செயல்பாட்டுத் தளத்தினைக் கொண்டு வருவதற்கும், வேளாண்மை, ஆற்றல், பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் நீர் வளம் ஆகிய முக்கியத் துறைகளில் ஏற்படும் பருவநிலை சார்ந்த இடர்களைக் கணித்து அவற்றிற்கான தணிப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் உதவுகிறது.
  • இந்தக் கட்டமைப்பானது ஆரம்பக் கட்டத்தில், பருவநிலை சார்ந்தச் சேவைகள் தேவைப் படும் பல்வேறு முகமைகளுக்கிடையில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்.
  • 2009 ஆம் ஆண்டில் பருவநிலை சார்ந்த சேவைகளுக்கான கட்டமைப்பு அறிவிக்கப் பட்டது முதல், சுவிட்சர்லாந்து, சீனா, ஜெர்மனி மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை தேசியப் பருவநிலை சேவைக் கட்டமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்