TNPSC Thervupettagam

தேசியப் பல் மருத்துவ ஆணைய மசோதா – 2023

August 19 , 2023 338 days 186 0
  • இது 1948 ஆம் ஆண்டு பல் மருத்துவர்கள் சட்டத்தினைத் திருத்தியமைக்க உள்ளது.
  • சர்வதேச அளவுருக்களுக்கு இணையாக பல்மருத்துவக் கல்வி மற்றும் தொழில்முறை கட்டமைப்பினை மாற்றுவதற்காக அவற்றை முழுமையாக மறுசீரமைப்பதற்கு இந்த மசோதா திட்டமிடுகிறது.
  • இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்
    • தேசியப் பல் மருத்துவ ஆணையம் மற்றும் மாநில பல் மருத்துவச் சபைகளை அமைத்தல்,
    • இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு மூன்று தன்னாட்சி வாரியங்கள்,
    • நெறிமுறைகள் மற்றும் பல் மருத்துவப் பதிவு வாரியம் (EDRB),
    • நிலையான பதவிக் காலம் மற்றும் தொழில்முறை மேம்பாடு,
    • தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கம்,
    • தேசிய இயங்கலைப் பதிவு மற்றும்
    • பல் மருத்துவ ஆலோசனைக் குழு
  • தனியார் துறை பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள 50% இடங்களுக்கான கட்டண நிர்ணயத்திற்கான பல்வேறு வழி காட்டுதல்களை உருவாக்கச் செய்வதற்கான ஒரு அதிகாரத்தினை இந்த மசோதா இந்த ஆணையத்திற்கு வழங்குகிறது.
  • அனைத்து மாநில அரசுகளும் பல் மருத்துவச் சபைகள் அல்லது கூட்டு பல் மருத்துவச் சபைகளை நிறுவுவதற்கு அறிவுறுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்