தேசியப் பல்லுயிர்ப் பெருக்க உத்தி மற்றும் செயல் திட்டம்
November 7 , 2024 18 days 106 0
இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசியப் பல்லுயிர்ப்பெருக்க உத்தி மற்றும் செயல் திட்டம் (NBSAP) ஆனது கொலம்பியாவில் நடைபெற்ற 16வது பங்குதாரர்கள் மாநாட்டின் (COP 16) போது வெளியிடப் பட்டது.
2050 ஆம் ஆண்டிற்குள் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்ற நீண்ட காலக் கண்ணோட்டத்துடன், 2030 ஆம் ஆண்டிற்குள் பல்லுயிர்ப் பெருக்க இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான உத்திகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கிய செயல் திட்டமாகும்.
இந்தியாவானது தனது NBSAP திட்டத்தினைப் புதுப்பித்து, அதனுள் ‘ஒட்டு மொத்த அரசு முகமைகளின் ஈடுபாடு’ மற்றும் ‘ஒட்டு மொத்த சமூக அமைப்புகளின் ஈடுபாடு’ ஆகிய அணுகுமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தியா தனது நிலப்பரப்பு, நீர் நிலைகள் மற்றும் கடலோர மற்றும் கடல் பகுதிகளில் குறைந்தபட்சம் சுமார் 30% பகுதிகளைப் பாதுகாப்பதற்கு உறுதி பூண்டுள்ளதோடு பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த பகுதிகளின் இழப்பு எண்ணிக்கையானது 2030 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியத்தினை எட்டும் நிலையில் உள்ளது.
17 மாபெரும் பல்லுயிர்ப் பெருக்கம் கொண்ட நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியா, 1994 ஆம் ஆண்டில் பல்லுயிர்ப் பெருக்கம் மீதான உடன்படிக்கையின் ஒரு உறுப்பினராக மாறியது.
இது உலக நிலப்பரப்பில் வெறும் 2.4 சதவீதப் பகுதிகளுக்குள் உலகில் பதிவு செய்யப் பட்ட உயிரினங்களில் 7-8% ஆனது இந்தியாவில் காணப்படுகிறது.
இந்தியா 55,000க்கும் மேற்பட்ட தாவர வகைகளையும் 100,000க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களையும் கொண்டுள்ளது.
முதல் NBSAP ஆனது 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.