TNPSC Thervupettagam

தேசியப் பல்லுயிர்ப் பெருக்க உத்தி மற்றும் செயல் திட்டம்

November 7 , 2024 18 days 105 0
  • இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசியப் பல்லுயிர்ப்பெருக்க உத்தி மற்றும் செயல் திட்டம் (NBSAP) ஆனது கொலம்பியாவில் நடைபெற்ற 16வது பங்குதாரர்கள் மாநாட்டின் (COP 16) போது வெளியிடப் பட்டது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்ற நீண்ட காலக் கண்ணோட்டத்துடன், 2030 ஆம் ஆண்டிற்குள் பல்லுயிர்ப் பெருக்க இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான உத்திகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கிய செயல் திட்டமாகும்.
  • இந்தியாவானது தனது NBSAP திட்டத்தினைப் புதுப்பித்து, அதனுள் ‘ஒட்டு மொத்த அரசு முகமைகளின் ஈடுபாடு’ மற்றும் ‘ஒட்டு மொத்த சமூக அமைப்புகளின் ஈடுபாடு’ ஆகிய அணுகுமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்தியா தனது நிலப்பரப்பு, நீர் நிலைகள் மற்றும் கடலோர மற்றும் கடல் பகுதிகளில் குறைந்தபட்சம் சுமார் 30% பகுதிகளைப் பாதுகாப்பதற்கு உறுதி பூண்டுள்ளதோடு பல்லுயிர்ப் பெருக்கம் நிறைந்த பகுதிகளின் இழப்பு எண்ணிக்கையானது 2030 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜியத்தினை எட்டும் நிலையில் உள்ளது.
  • 17 மாபெரும் பல்லுயிர்ப் பெருக்கம் கொண்ட நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியா, 1994 ஆம் ஆண்டில் பல்லுயிர்ப் பெருக்கம் மீதான உடன்படிக்கையின் ஒரு உறுப்பினராக மாறியது.
  • இது உலக நிலப்பரப்பில் வெறும் 2.4 சதவீதப் பகுதிகளுக்குள் உலகில் பதிவு செய்யப் பட்ட உயிரினங்களில் 7-8% ஆனது இந்தியாவில் காணப்படுகிறது.
  • இந்தியா 55,000க்கும் மேற்பட்ட தாவர வகைகளையும் 100,000க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களையும் கொண்டுள்ளது.
  • முதல் NBSAP ஆனது 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்