இந்தத் தினமானது இராணுவம், துணை இராணுவம், அதிரடிப்படை வீரர்கள், காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை உள்ளடக்கிய நமது பாதுகாப்புப் படைகளுக்கு நன்றி தெரிவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசியப் பாதுகாப்புச் சபை என்பது நாட்டின் அரசியல், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் உத்திசார் பாதுகாப்பு ஆகியவை குறித்த சிக்கல்களைப் போக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு உச்ச நிலை அமைப்பாகும்.
இது 1998 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் நிறுவப்பட்டது.