ஒவ்வொரு தொழில்துறையிலும் பாதுகாப்பு மற்றும் அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு என்று மிகவும் முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
தேசியப் பாதுகாப்பு சபையானது (NSC) 1966 ஆம் ஆண்டு மார்ச் 04 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
இந்த அமைப்பு ஆனது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் பணி இடங்களில் பாதுகாப்பான நடைமுறைகளைப் பேணத் தன்னார்வ முயற்சிகளை மேற் கொள்ள ஊக்குவிப்பதற்கும் செயல்படுகிறது.
NSC ஆனது 1972 ஆம் ஆண்டில் மார்ச் 04 ஆம் தேதியினை தேசியப் பாதுகாப்பு தினமாக நியமித்தது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Safety & Well-Being Crucial for Viksit Bharat" (வளர்ச்சியடைந்த இந்தியா) என்பதாகும்.