TNPSC Thervupettagam

தேசியப் பால் தினம் - நவம்பர் 26

November 28 , 2023 235 days 165 0
  • தேசியப் பால் தினம் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.
  • இவர் ‘இந்தியாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
  • உலகின் மிகப்பெரிய வேளாண் திட்டமாக அறியப்படும் அவரது ‘ஆபரேஷன் ஃப்ளட்’ என்ற நடவடிக்கை மூலம் புகழ் பெற்றவர்.
  • அமுல் தயாரிப்பின் ஸ்தாபனத்திலும் அதன் வெற்றியிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
  • ஆபரேஷன் ஃப்ளட் என்ற நடவடிக்கையானது 1970 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • இது உலகின் மிகப்பெரிய பால்வள மேம்பாட்டுத் திட்டமாகும்.
  • 1998 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விஞ்சி மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா மாறியது.
  • தற்போது, இந்தியாவின் பால் உற்பத்தித் துறையானது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% பங்களிப்பதன் மூலம், மிகப்பெரிய தன்னிறைவு பெற்ற துறைகளில் ஒன்றாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்