TNPSC Thervupettagam

தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் தலைவர்

December 8 , 2022 592 days 280 0
  • தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் (NCBC) தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் பொறுப்பேற்றுள்ளார்.
  • தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையமானது 1993 ஆம் ஆண்டு தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையச் சட்டத்தின் மூலம் மத்திய அரசினால் உருவாக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 102வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், தேசியப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் ஒரு அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாக மாறியது.
  • இது இந்திய அரசியலமைப்பின் 338B என்ற பிரிவின் கீழ் நிறுவப்பட்டது.
  • இந்த ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் அவர்களால் நியமிக்கப்படுவர்.
  • இதன பணி நிலைகள் மற்றும் பதவிக் காலம் ஆகியவை குடியரசுத் தலைவரால்  தீர்மானிக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்