TNPSC Thervupettagam

தேசியப் புத்தாக்க நிறுவன நாள் - ஜனவரி 16

January 18 , 2022 952 days 472 0
  • பிரதமர் மோடி ஜனவரி 16 ஆம் தேதியை ‘தேசியப் புத்தாக்க நிறுவன தினமாக’ அறிவித்தார்.
  • இந்தியாவில் இத்தினம்  கொண்டாடப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்திய நாடானது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10  முதல் ஜனவரி 16  வரையில் தொடங்கி ஸ்டார்ட்-அப் இந்தியா புத்தாக்க வாரத்தைக் கொண்டாடுகிறது.
  • தொழில் மற்றும் தொழில்துறை வர்த்தக ஊக்குவிப்புத் துறையால், இந்த வார அளவிலான கொண்டாட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டில், தேசியப் புத்தாக்க நிறுவன தினமானது ஆறு கருத்துருக்களில் கொண்டாடப் படுகிறது.
  • அவை நிலையான வளர்ச்சி, எதிர்காலத்தின் தொழில்நுட்பம், உள்ளூர் முதல் உலகளவு வரை, உற்பத்தியில் ஜாம்பவான்களை உருவாக்குதல், டிஎன்ஏவைத் தூண்டச் செய்தல் மற்றும் கடைமட்டப் பகுதியில்  இருந்து உருவாதல் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்