TNPSC Thervupettagam

தேசியப் புத்தாக்க நிறுவனங்கள் விருதுகள் 2021

January 20 , 2022 916 days 438 0
  • இது தேசியப் புத்தாக்க நிறுவனங்கள் விருதுகள் விழாவின் இரண்டாவது பதிப்பாகும்.
  • இது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இதில் வெற்றியாளர்களாக மொத்தம் 46 புத்தாக்க நிறுவனங்கள் அங்கீகரிக்கப் பட்டு உள்ளன.
  • மாநில வாரியாக, 46 விருதுகளில் 14 விருதுகளைப் பெற்று அதிக எண்ணிக்கையிலான விருதுகளை கர்நாடகா பெற்றுள்ளது.
  • ஃபின்டெக் (fintech) என்ற நிதித் தொழில்நுட்பப் பிரிவில் நிதியினை உள்ளடக்கிய ஒரு துணைத் துறையில், பெங்களூரைச் சேர்ந்த நாஃபா இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு நிறுவனம் வெற்றியாளராக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • ஃபின்டெக் என்ற நிதித் தொழில்நுட்பப் பிரிவின் காப்பீட்டுத் துணைத் துறையில், அம்போ ஐட்டெக் பிரைவேட் லிமிடெட் (Umbo Idtech Private Limited) என்ற ஒரு நிறுவனம் விருதை வென்றது.
  • ரோபோடிக்ஸ் துணைத் துறையில் சாகர் டிஃபென்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • பெண்கள் தலைமையிலான புத்தாக்க நிறுவனங்கள் என்ற பிரிவில், ஜெய்ப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஃபிரான்டியர் மார்க்கெட்ஸ் என்ற நிறுவனம் கவுரவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்