TNPSC Thervupettagam

தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - நவம்பர் 7

November 9 , 2019 1786 days 608 0
  • தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினமானது முதன்முதலில் மத்தியச் சுகாதார அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தனால் 2014 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப் பட்டது.
  • இத்தினமானது புற்றுநோய், அதன் சிகிச்சை முறைகள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக நவம்பர் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அனுசரிக்கப் படுகின்றது.
  • கேரளாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் இலவசப் புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதற்காக "சுஹூர்த்தம்" என்ற ஒரு திட்டத்தை அம்மாநில அரசு முன்மொழிந்துள்ளது.
  • புற்றுநோய பற்றிய லான்செட் அறிக்கையின்படி, இதய நோய்க்குப்  பிறகு இரண்டாவது கொடிய நோயாக (மரணம் ஏற்படுத்தும்) இந்தியா புற்றுநோயைக் கொண்டுள்ளது.
  • உலகளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் பிப்ரவரி 4 ஆம் தேதியன்று உலகப் புற்றுநோய் தினம் கொண்டாடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்