TNPSC Thervupettagam

தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் – 07 நவம்பர்

November 8 , 2021 1024 days 280 0
  • புற்றுநோய், அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதற்காக வேண்டி இந்தியாவில் ஆண்டுதோறும் இத்தினமானது  அனுசரிக்கப்படுகிறது.
  • உலகளவிலான உயிரிழப்புகளுக்கு புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 18 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ள வேளையில் அவற்றில் இந்தியாவில் மட்டும் 1.5 மில்லியன் வழக்குகள் பதிவாகி உள்ளன.
  • 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 0.8 மில்லியன் மக்கள் மற்றும்  உலகளவில் 9.5 மில்லியன் மக்கள் என்ற அளவில்  புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கைகள் பதிவாகின.
  • 2014 ஆம் ஆண்டு நவம்பர் 07 அன்று, முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நவம்பர் மாதத்தின் ஏழாவது நாள் தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்