TNPSC Thervupettagam

தேசியப் புள்ளியியல் தினம் – ஜுன் 29

June 30 , 2020 1550 days 447 0
  • இது பேராசிரியர் PC மஹலநோபிஸின் பிறந்த தினத்தன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • உலக அங்கீகாரத்தைப் பெற்ற முதலாவது புள்ளியியல் அறிஞர் இவராவார். இவர் இந்தியப் புள்ளியியலின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார்.
  • இவர் இந்தியப் புள்ளியியல் அமைப்பின் தலைமைக் கட்டமைப்பாளராகக் குறிப்பிடப் படுகின்றார்.
  • இவர் 1931 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை ஏற்படுத்தினார்.
  • இவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது திட்டக் குழு ஆணையத்தின் (1951-56) உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான புள்ளியியல் தினத்தின் கருத்துரு, “நீடித்த வளர்ச்சி இலக்கு – 3 (அனைவருக்கும் அனைத்து வயதிலும் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நலனை உறுதி செய்தல்) & நீடித்த வளர்ச்சி இலக்கு – 5 (பாலினச் சமத்துவத்தை உறுதி செய்தல் & பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல்)” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்