சுரங்க அமைச்சகமனது, புது டெல்லியில் தேசியப் புவி அறிவியல் தரவுக் களஞ்சியம் (NGDR) என்ற தளத்தினை அறிமுகம் செய்துள்ளது.
NGDR என்பது நாடு முழுவதும் உள்ள புவிசார் தகவல்களை அணுகச் செய்வதற்கும், பகிர்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்குமான ஒரு விரிவான இயங்கலை தளமாகும்.
பயன் மிக்க வளங்களுக்கான முன்னெப்போதும் இல்லாத வகையிலான அணுகலுடன் தொழில் துறைகள் மற்றும் கல்வித்துறையில் உள்ள பங்குதாரர்களுக்கு முக்கியமான புவி அறிவியல் தரவைப் பொது உடைமை ஆக்குவதில் இது ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படியாகும்.