TNPSC Thervupettagam

தேசியப் பெண் குழந்தைகள் தினம் - ஜனவரி 24

January 26 , 2023 576 days 255 0
  • இந்தத் தினமானது, 2008 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
  • தேசியப் பெண் குழந்தைகள் தினத்தின் குறிக்கோள் ஆனது, பெண் குழந்தைகள் எதிர் கொள்ளும் பாரபட்சம் மற்றும் அநீதியை எடுத்துரைப்பதே ஆகும்.
  • மேலும், இந்தத் தினம் நம் நாட்டில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஊக்குவிக்கிறது.
  • கல்வி, வேலை வாய்ப்பு, உடை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெண்கள் எதிர் கொள்ளும் ஏற்றத் தாழ்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
  • ஆனால் சர்வதேச பெண் குழந்தைகள் தினமானது அக்டோபர் 11 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்