நாட்டின் 640 மாவட்டங்கள் முழுவதும் ஆபத்துடைய அபாயங்களையும் பேரிடர்களையும் அளவிடுகின்ற முதல் தேசியப் பேரிடர் ஆபத்துக் குறியீடு (National Disaster Risk Index) அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தக் குறியீடானது, ஐ.நா மேம்பாட்டுத் திட்டத்தின் (United Nations Development Programme -UNDP) ஆதரவோடு மத்திய உள்துறை அமைச்சகத்தால் (Union Home Ministry) தயார் செய்யப்பட்ட வரைவு அறிக்கை வடிவில் உள்ளது.
இந்தக் குறியீட்டின் படி, மகாராஷ்டிரா மாநிலமானது பேரிடரால் மிகவும் பாதிப்படையக் கூடிய மாநிலமாகும் (Most Disaster Vulnerable State). மகாராஷ்டிராவைத் தொடர்ந்து மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
யூனியன் பிரதேசங்களுள் டெல்லி மிகவும் பேரிடர் ஆபத்து மிக்க யூனியன் பிரதேசமாகும்.