நாட்டில் நிலவி வரும் மோசமான வறட்சியை தென்னாப்பிரிக்க அரசானது தேசியப் பேரிடராக (National Diasater) அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கத் தலைநகரில் ஒன்றான கேப் டவுன் உட்பட மேற்கு மற்றும் தெற்கு தென்னாப்பிரிக்க பகுதிகள் மோசமான வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.
வறட்சி மிகவும் தீவிரமடைந்து வருவதனைத் தொடர்ந்து நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி “டே ஜீரோ“ எனும் பூஜ்ஜிய நாள் நிகழ்வை தென்னாப்பிரிக்கா சந்திக்கும் என கணிக்கப்பட்டது.
இருப்பினும் தண்ணீர் சிக்கன மற்றும் சேமிப்பு நடவடிக்கைகள் காரணமாக டே ஜீரோ நிகழ்வானது ஜூன் மாதத்தின் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எத்தகு பயன்பாட்டிற்கும் தண்ணீர் முற்றிலுமாக இல்லாத நாளே “டே ஜீரோ“ என்று அழைக்கப்படும்.
எல்-நினோ (El-Nino) மற்றும் உலக வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு ஆகியவை மோசமான வறட்சிக்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளது.