TNPSC Thervupettagam

தேசியப் பேரிடர் - தென்னாப்பிரிக்கா

February 17 , 2018 2345 days 756 0
  • நாட்டில் நிலவி வரும் மோசமான வறட்சியை தென்னாப்பிரிக்க அரசானது தேசியப் பேரிடராக (National Diasater) அறிவித்துள்ளது.
  • தென்னாப்பிரிக்கத் தலைநகரில் ஒன்றான கேப் டவுன் உட்பட மேற்கு மற்றும் தெற்கு தென்னாப்பிரிக்க பகுதிகள் மோசமான வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.
  • வறட்சி மிகவும் தீவிரமடைந்து வருவதனைத் தொடர்ந்து நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி “டே ஜீரோ“ எனும் பூஜ்ஜிய நாள் நிகழ்வை தென்னாப்பிரிக்கா சந்திக்கும் என கணிக்கப்பட்டது.
  • இருப்பினும் தண்ணீர் சிக்கன மற்றும் சேமிப்பு நடவடிக்கைகள் காரணமாக டே ஜீரோ நிகழ்வானது ஜூன் மாதத்தின் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • எத்தகு பயன்பாட்டிற்கும் தண்ணீர் முற்றிலுமாக இல்லாத நாளே “டே ஜீரோ“ என்று அழைக்கப்படும்.
  • எல்-நினோ (El-Nino) மற்றும் உலக வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு ஆகியவை மோசமான வறட்சிக்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்