இந்த தினமானது விஸ்வேஸ்வரய்யா அவர்களின் வாழ்வியல் மரபுகளுக்கு கௌரவம் செலுத்துவதுடன், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பொறியாளர்கள் ஆற்றியப் பங்களிப்பினை அங்கீகரிக்கிறது.
இந்தத் தினமானது மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த நாளை நினைவு கூருகிறது.
சர் விஸ்வேஸ்வரய்யா இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத் தக்க தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடி ஆவார்.
அணைகள், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் பிற திட்டங்களின் மேம்பாட்டில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் அவர் இந்தியாவில் பொறியியலின் தந்தை எனவும் அழைக்கப் படுகிறார்.
1912 முதல் 1918 வரையில் அவர் மைசூரின் 19வது திவானாகவும் பதவி வகித்தார்.
அவர் நவீன மைசூரின் அடித்தளமிட்டவர் என அழைக்கப் படுகிறார்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'நிலையான எதிர்காலத்திற்கான பொறியியல்' என்பதாகும்.