TNPSC Thervupettagam

தேசியப் பொறியாளர் தினம் - செப்டம்பர் 15

September 17 , 2022 708 days 277 0
  • இந்தத் தினமானது சிறந்தப் பொறியாளர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் சாதனைகளை அங்கீகரித்துக் கௌரவிக்கிறது.
  • இந்திய நாட்டுடன் சேர்த்து, விஸ்வேஸ்வரய்யா அவர்களின் மகத்தானப் படைப்புகளுக்காக இலங்கை மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளிலும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
  • புனேவுக்கு அருகிலுள்ள நீர்த் தேக்கத்தில் நீர் வழங்கல் மற்றும் சேமிப்பு நிலையை உயர்த்துவதற்கு காப்புரிமை பெற்று நீர்ப் பாசன அமைப்பை அவர் நிறுவினார்.
  • குவாலியரின் டைக்ரா அணை மற்றும் மைசூருவின் கிருஷ்ணராஜ சாகர் (KRS) போன்ற அணைகளில் இந்தப் பாசன அமைப்பு பின்னர் நிறுவப்பட்டது.
  • இந்தியத் தேசத்தினைக் கட்டியெழுப்ப அவர் ஆற்றிய சிறப்பானப் பங்களிப்பிற்காக 1955 ஆம் ஆண்டில் அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.
  • இவருக்கு பிரிட்டிஷ் நைட்ஹூட் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் 1912 முதல் 1918 வரை மைசூர் திவானாகவும் இவர் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்