TNPSC Thervupettagam
September 3 , 2022 817 days 548 0
  • பிரதமர் அவர்களின் தலைமையிலான பாதுகாப்பு மீதான அமைச்சரவைக் குழு (CCS) தேஜாஸ் மார்க்-2 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
  • தேஜாஸ் 2.0 விமானமானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானத்தின் (LCA) அதிக திறன் கொண்ட வடிவமாக இருக்கும்.
  • இந்தப் புதிய ஜெட் விமானத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செயல்திறன் கொண்ட மின்னணு உரலி நிரல் (AESA) ரேடார் ஆனது பொருத்தப்பட்டிருக்கும்.
  • தேஜாஸ் விமானமானது இந்திய விமானப்படையின் போர்க் கப்பற்படையில் உள்ள மார்க்-2, மிராஜ்-2000, ஜாகுவார்ஸ் மற்றும் மிக்-29 போன்ற போர் விமானங்களுக்கு ஒரு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • GE-404 எந்திரங்கள் பொருத்தப்பட்ட தேஜாஸ் மார்க்-1, மற்றும் வழக்கற்றுப் போன MiG-21 போன்றவைகளுக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டது.
  • தேஜாஸ் மார்க்-1 விமானமானது முதன்மையாக இந்திய விமானப் படையின் வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
  • ஆனால் மார்க்-2 ரகமானது தாக்குதல் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்