இந்திய இரயில்வேயால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலையானது (ICF - Integral Coach Factory) நவீன மற்றும் பல சிறப்பம்சங்களுடன் கூடிய தேஜாஸ் எனும் விரைவு வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பல சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த இரண்டாவது தேஜாஸ் விரைவு வண்டியானது சென்னை மற்றும் மதுரைக்கு இடையே இயக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கென ஒரு அதிநவீன இரயில் வண்டியை நாமே தயாரிப்பது இதுவே முதன் முறையாகும்.
முதல் தேஜாஸ் இரயில் வண்டியானது 2017-ம் ஆண்டிலிருந்து மும்பை மற்றும் கோவாவுக்கு இடையே இயக்கப்படுகிறது.