TNPSC Thervupettagam

தேனீக்களுக்கான முதல் தடுப்பூசி

January 10 , 2023 558 days 312 0
  • உலகில் முதல் முறையாக தேனீக்களுக்கான தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது அமெரிக்க ஃபவுல்புரூட் நோயால் ஏற்படும் தேனீக்களின் இறப்புகளைத் தடுக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது தேனீக்களின் லார்வாக்களைத் தாக்கி தேனீக் கூட்டங்களினை வலுவிழக்கச் செய்யும் ஒரு பாக்டீரியா நோய்த் தொற்றாகும்.
  • இராணித் தேனீக்கு அளிக்கப்படும் ராயல் ஜெல்லி எனப்படும் சுரப்பியில் செயலற்ற ஒரு பாக்டீரியாவினை உட்செலுத்துவதன் மூலம் இது செயல்படுகிறது.
  • அமெரிக்காவில் 2006 ஆம் ஆண்டு முதல் தேனீக் கூடுகளின் எண்ணிக்கையானது வருடாந்திர அளவில் சரிவினைக் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்