TNPSC Thervupettagam

தேனுண்ணுங்கரடி

March 4 , 2022 871 days 427 0
  • தேனுண்ணுங் கரடி, புலி மற்றும் செந்நாய் ஆகிய விலங்குகள் சாலை கட்டுமானத்தின் காரணமாக உலகளவில் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் 36 உயர்மட்ட இரைப் பிடித்துண்ணிகளுள் உள்ளடங்கும்.
  • தேனுண்ணுங்கரடிகளின் வாழ்விடமானது இந்தியத் துணைக் கண்டத்தில் காணப் படுவதால், இதுவே அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு இரைப்பிடித்துண்ணியாகும்.
  • இந்தியாவில் 2012 முதல் 2017 வரையில் 15 தேனுண்ணுங்கரடிகள் சாலை விபத்தில் கொல்லப் பட்டுள்ளன.
  • தேனுண்ணுங்கரடிக்கு அடுத்தபடியாக செந்நாய் (அ) ஆசியக் காட்டு நாயும் அதனைத் தொடர்ந்து புலி, ஆசியக் கருங்கரடி, படைச் சிறுத்தை, சூரியக் கரடி மற்றும் சுண்டா படைச் சிறுத்தை ஆகியவை உள்ளன.
  • முதல் 10 இடங்களிலுள்ள உயர்மட்ட இரைப்பிடித்துண்ணிகளுள் 10 விலங்குகள் ஆசிய வாழ்விடங்களினூடே செல்லும் சாலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்