மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் சமீபத்தில் இந்தக் கூட்டுறவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், 5 மாநிலங்களில் 5 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organization - FPO) ஏற்படுத்தப்பட உள்ளன.
இவை பீகாரில் கிழக்கு சம்பாரன், இராஜஸ்தானில் பரத்பூர், மத்தியப் பிரதேசத்தில் மொரேனா, உத்தரப் பிரதேசத்தில் மதுரா, மேற்கு வங்காளத்தில் சுந்தரவனம் ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த அமைப்புகள் இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையிடல் கூட்டமைப்பான NAFED (National agricultural Cooperative marketing federation) என்ற அமைப்பினால் அமைக்கப்பட உள்ளன.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் படி, தேன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 8வது இடத்தில் உள்ளது.
அதே சமயம் தேன் உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் உள்ளது.