நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான விஜயகாந்த் சமீபத்தில் காலமானார்.
இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த், அதன் பிறகு 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார்.
தொடங்கப்பட்ட ஒரு வருடம் கழித்து நடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தேமுதிக 8.4% வாக்குகளைப் பெற்றது.
2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 29 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு, அந்தக் கட்சியின் நிறுவனரான விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆனார்.