அரசியல் சொற்பொழிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) கேட்டுக் கொண்டுள்ளது.
அரசியலில் அணுகல் மற்றும் உள்ளடக்கம் என்ற பெரும் கொள்கையை ஊக்குவிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் இழிவுபடுத்தும் மற்றும் முற்கோல்களை நிலைநிறுத்தும் வகையிலான மாற்றுத்திறன் தொடர்பான கருத்துக்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொது அறிக்கைகள், உரைகள், கட்டுரைகள் மற்றும் பிரச்சாரப் பரப்புரைகளில் தரக் குறைவான சொற்களைப் பயன்படுத்துவதும் இந்த வழிகாட்டுதல்களின்படி தடை செய்யப் பட்டுள்ளது.
அத்தகைய மொழி, சொற்கூறுகள், சூழலிசைவு, கேலி, தரக்குறைவான குறிப்புகள் அல்லது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் எந்தவொரு செயலும் 2016 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் 92வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட தகுதியுடையதாகும்.