தமிழ்நாட்டின் தேர்தல் செலவினங்களின் சிறப்புக் கண்காணிப்பாளராக முன்னாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான மது மகாஜன் என்பவரை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இவர் சட்ட விரோதப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் இலவசங்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடவிருக்கிறார்.
இவரது பணி வாக்காளர் உதவி எண் “1950” மற்றும் சி - விஜில் செயலி ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நுண்ணறிவுத் தகவல்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் கடுமையான பயனுள்ள அமலாக்க நடவடிக்கைகளை உறுதி செய்வதாகும்.
பணம், மது மற்றும் இலவசங்கள் ஆகியவற்றை விநியோகிப்பதன் மூலம் வாக்காளர்களைத் தூண்ட முயற்சிக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.