தேர்தல் நிதிப் பத்திரங்கள் வழங்குதல் மற்றும் அவற்றை ரொக்கமாக மாற்றுதல்
November 1 , 2018 2217 days 910 0
தேர்தல் நிதிப் பத்திரங்களை வழங்குவதற்கும் அப்பத்திரங்களை ரொக்கமாக மாற்றுவதற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு அங்கீகாரம் அளித்து அறிவிப்பொன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது.
SBI ஆனது 2018 நவம்பர் 1 முதல் 10 வரை தனது 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் தேர்தல் நிதிப் பத்திரங்களை வழங்கவும், ரொக்கமாக மாற்றவும் உள்ளது.
தேர்தல் நிதிப் பத்திர திட்டம் 2018-ன் விதிமுறைகளின்படி
இந்தியாவின் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த ஒரு நிறுவனத்தாலும் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கப்படலாம்.
இந்த தேர்தல் நிதிப் பத்திரங்களானது வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாள்காட்டி நாட்களுக்கு செல்லுபடியாகும்.
குறிப்பு
1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1951-ன் 43வது சட்டம்) பிரிவு 29-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கடந்த தேர்தலில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் 1 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற கட்சிகள் மட்டுமே இப்பத்திரத்தைப் பெற இயலும்.