பாரதிய ஜனதா கட்சியானது, கடந்த ஐந்தாண்டுகளில் அரசியல் நன்கொடையாக சுமார் 6,061 கோடி பெற்றதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழான மிகப் பெரியப் பயனாளியாக இருந்துள்ளது.
இது 2019-20 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அரசியல் கட்சிகளால் பணமாக்கப் பட்ட அனைத்து தேர்தல் பத்திரங்களின் மதிப்பில் 48 சதவீதமாகும்.
1,610 கோடி ரூபாய் நிதி திரட்டிய திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் சுமார் 1,422 கோடி ரூபாய் மதிப்புடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
1,215 கோடி ரூபாய் நிதியுடன் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி, முந்தைய தெலுங்கானா இராஷ்ட்ரிய சமிதி, மற்றும் 776 கோடி ரூபாய் நிதியுடன் பிஜு ஜனதா தளம் ஆகியவை முறையே 4வது மற்றும் 5வது இடங்களில் இடம் பெற்றுள்ளன.