TNPSC Thervupettagam

தேர்தல் பத்திரங்கள் ரத்து

February 18 , 2024 284 days 296 0
  • உச்ச நீதிமன்றமானது குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுகிறது என்று கூறி தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது.
  • இது அரசியல் கட்சிகள் மற்றும் நன்கொடையாளர்களிடையே சரியீடு அல்லது கையூட்டு நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
  • இந்தப் பத்திரங்களை வழங்குவதை நிறுத்தவும், இதுவரை அளிக்கப்பட்ட நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இத்திட்டம் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • அரசியல் கட்சிகள் இந்த வழியில் பெறப்பட்டப் பங்களிப்புகள் குறித்தத் தகவல்களை வெளியிடத் தேவையில்லை, அதாவது நிறுவனங்கள் வரம்பற்ற நிதி பரிமாற்றங்களை செய்யலாம், என்ற வசதியினை இது வழங்கியது..
  • தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 16,437.63 கோடி ரூபாய் மதிப்புள்ள 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்கப் பட்டு உள்ளன.
  • இத்திட்டத்தின் தொடக்கத்தில் 2017-2018 ஆம் ஆண்டில் 210 கோடி ரூபாயைப் பெற்ற பாஜக, 2022-23 ஆம் ஆண்டில் 1,294.14 கோடி ரூபாயைப் பெற்றது.
  • 2022-2023 ஆம் ஆண்டில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) 325 கோடி ரூபாயும், திமுக 185 கோடி ரூபாயும் பெற்ற நிலையில்  இந்திய தேசிய காங்கிரஸ் 171.02 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்