TNPSC Thervupettagam

தேர்தல் - வன்முறை

May 16 , 2019 1894 days 612 0
  • இதற்கு முன் நடைபெறாத ஒரு நிகழ்வாக, மேற்கு வங்கத்தின் 9 தொகுதிகளுக்கான 7வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தலுக்கானப் பிரச்சாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் இரத்து செய்துள்ளது. இது 16-05-2019 அன்று இரவு 10 மணியிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கின்றது.
  • தேர்தலுக்கு முன்பான 48 மணி நேர அமைதிக் காலமானது 17-05-2019 அன்று தான் தொடங்கவிருக்கிறது.
  • இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் சரத்து 324-ன் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
  • இந்த சரத்தானது “தேர்தலை மேற்பார்வையிடுதல், வழிகாட்டுதல் மற்றும் தேர்தலை நடத்துதல்” ஆகியவற்றிற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரத்தினை வழங்குகின்றது.
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசியல் கட்சிகளிடையே ஏற்படும் தேர்தல் குறித்த வன்முறைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இது குறித்த செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும் : https://www.tnpscthervupettagam.com/article-324/.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்