TNPSC Thervupettagam

தேர்வில் வெற்றி பெறு, மாவீரனாக இரு - கைபேசி செயலி

March 21 , 2019 1950 days 521 0
  • காந்தி நகரில் உள்ள இந்திய பொதுச் சுகாதார நிறுவனமானது (IIPHG - Indian Institute of Public Health Gandhinagar) “தேர்வில் வெற்றி பெறு, மாவீரனாக இரு” என்ற ஒரு கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது குஜராத் மாநில அரசின் சுகாதாரம் & குடும்ப நலத் துறை மற்றும் தேசிய மன நலத் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது.
  • இந்தச் செயலியானது விழிப்புணர்வை உருவாக்கவும் அதேபோல் மாணவர்களின் பலவீனமான பகுதிகள் குறித்துப் பகுப்பாய்வு செய்யவும் அவர்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் தேர்வு குறித்த மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவுகிறது.
  • தற்பொழுது இந்தச் செயலியானது ஆங்கில மொழியில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வருங்காலங்களில் இந்தி, குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளும் இந்தச் செயலியில் இணைக்கப்படவிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்