இவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கச் சமயத்திற்கு மாறிய, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு தியாகி ஆவார்.
இவர் 1712 ஆம் ஆண்டில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயருடன் பிறந்தார்.
இவர் 1745 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு “லாசாரஸ்” என்ற ஒரு பெயரைப் பெற்றார்.
உள்ளூர் மொழியில் “லாசரஸ்” அல்லது “தேவசகாயம்” என்பதன் பொருள் “கடவுளே என் உதவி” என்பதாகும்.
இவர் 2022 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று வாட்டிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா எனும் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட உள்ளார்.
திருச்சபையில் அங்கம் வகிக்காத, புனிதர் பட்டம் பெறும் முதல் இந்தியப் பாமரர் என்றப் பெருமையை இவர் பெறுவார்.
இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் புனிதத் துறவி ஆவார்.
வாட்டிகன் நகரானது இத்தாலியில் அமைந்துள்ள, முழுவதும் ரோம் நகரால் சூழப் பட்ட ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தின் தலைமையகமாகும்.