இந்தியாவின் முதல் தேவாங்குச் சரணாலயம் மற்றும் கடல்பசு வளங்காப்பகம் ஆகியவற்றினை அறிவித்ததையடுத்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு உயிரினங்களுக்குமான வளங்காப்பு மையங்களையும் அமைப்பதற்கு தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தேவாங்கு வளங்காப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோரா எனுமிடத்தில் கடல்பசு வளங்காப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
கடல்பசு வளங்காப்பு மையமானது முழுத் திட்டத்திற்கான ஒரு ஈடுபாட்டு மையமாக செயல்படும்.
அங்கு கடல்சார் அருங்காட்சியகம், அரைவட்ட வடிவ அரங்கம், கடல் ஆய்வு மையம் மற்றும் குடில்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.