சமீபத்தில் பாராளுமன்றம் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதியினர்) ஆணை (திருத்த) மசோதா, 2021 என்ற மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இம்மசோதா தமிழ்நாட்டில் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் வாழும் ஏழு பட்டியலிடப்பட்ட சாதியினர் சமுதாயத்தை “தேவேந்திர குல வேலாளர்” என்பதின் கீழ் கொண்டு வர உள்ளது.
அந்த ஏழு சாதிகள்
தேவேந்திர குலத்தான்
காலாடி
குடும்பன்
பள்ளன்
பண்ணாடி
வத்திரியன்
கடையன் (திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்)
வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான பட்டியலைக் குறிப்பிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 341 குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இது இப்பட்டியலை மாற்றியமைக்க பாராளுமன்றத்திற்கு அனுமதி அளித்து இருக்கிறது.