TNPSC Thervupettagam

தைவானில் மாபெரும் நிலநடுக்கம்

April 7 , 2024 103 days 183 0
  • தைவான் நாட்டில் குறைந்தது 25 ஆண்டுகளில் பதிவாகாத மாபெரும் நிலநடுக்கம் (7.2) சமீபத்தில் ஏற்பட்டது.
  • முக்கியமாக தைவான் நாடானது பசிபிக் பெருங்கடலின் "எரிமலை/நெருப்பு  வளைய" பகுதியில் அமைந்திருப்பதால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு உள்ளாகிறது என்ற ஒரு நிலையில் இங்கு உலகின் 90% நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன.
  • இந்தத் தீவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் 1980 ஆம் ஆண்டு முதல் 4.0 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவில் 2,000 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்பதோடு மேலும் 100க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் 5.5 ரிக்டர் அளவிற்கு மேல் இங்கு பதிவாகியுள்ளன.
  • எரிமலை வளையம் என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகள் மற்றும் நிலநடுக்கத் தளங்களின் தொடர் ஆகும்.
  • ஒரு அரை வட்டம் அல்லது குதிரையின் லாடம் போன்ற வடிவத்தில் உள்ள இது கிட்டத் தட்ட 40,250 கிலோமீட்டர்கள் நீண்டுள்ளது.
  • எரிமலை வளையம் பல கண்டத்தட்டுகளின் சந்திப்புப் புள்ளிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்